Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘மதுரை டைகர்’ ஆக மாறிய சிம்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ என்ற படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரை அருகிலுள்ள கோவில்பட்டியில் தொடங்கியது. முக்கிய வேடங்களில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ‘ஆடுகளம்’ கிஷோர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்க, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரிக்கிறார். கோவில்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. வெற்றிமாறனின் வட சென்னை யுனிவர்ஸாக உருவாகும் இப்படத்தில், இளம் வயது சிம்புவின் கேரக்டருக்காக, அவரிடம் 12 கிலோ வரை உடல் எடையை குறைக்க சொன்னார் வெற்றிமாறன்.

இதற்காக சில வாரங்களுக்கு முன்பு துபாய் சென்றிருந்த சிம்பு, தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு, ஆக்‌ஷன் காட்சிகளுக்கான டெக்னிக்குகளையும் கற்றுக்கொண்டு திரும்பினார். சிம்புவின் ஒரு கேரக்டர் பெயர், ‘மதுரை டைகர்’ என்று தெரிகிறது. மதுரையில் ஆரம்பிக்கும் கதை, வட சென்னை வரை வருகிறது. விளையாட்டு வீரராக சிம்பு கேம் ஆடும் காட்சிகளுடன் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படுகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி பங்கேற்கிறார். அவரது ஆக்‌ஷன் காட்சிகளை அப்போது படமாக்க திட்டமிட்டுள்ளனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.