Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

10 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’

சென்னை: ஒளிப்பதிவாளர் சிவா, தமிழில் கார்த்தி நடித்த ‘சிறுத்தை’, அஜித் குமார் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’, ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது சூர்யா நடிக்கும் படத்தை 10 மொழிகளில், 3டி தொழில்நுட்பத்தில் இயக்கி வருகிறார். சூர்யா நடிக்கும் 42வது படமான இதற்கு ‘கங்குவா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்தனர். ‘கங்குவா’ என்றால், நெருப்பின் சக்தி மற்றும் வலிமையுள்ள வீரன் என்று பொருள். சூர்யா ேஜாடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, ெரடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ் நடிக்கின்றனர். சிவா, ஆதி நாராயணா இணைந்து கதை எழுதியுள்ளனர்.

வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்ய, மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். தேவி பிரசாத் இசையில் விவேகா, மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகின்றனர். சரித்திரக்கதை கொண்ட இதை ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றன. கோவா மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் 50 சதவிகித படப் பிடிப்பு நடைபெற வேண்டியிருக்கிறது. இயக்குனர் சிவா கூறுகையில், ‘எனது இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு ’கங்குவா’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். திரையில் நெருப்பின் வீரமும், வலிமையும் கொண்ட ஹீரோவாக சூர்யா இருப்பார். இன்னும் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது.முழு படப்பிடிப்பும் முடிந்த பிறகு வெளியீட்டு தேதி பற்றி அறிவிப்போம்’ என்றார்.