Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் படத்துக்கு உலக சாதனை சான்றிதழ்

சென்னை: உலகிலேயே முதல்முறையாக தியேட்டர்களில் தணிக்கை சான்றிதழ் இணைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு சாதனை படைத்த ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் சாகச திரில்லர் படமான ‘டீன்ஸ்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தியேட்டர் ஒன்றில் நடந்தது. மணிரத்னம் வெளியிட்டார். ஒரேநாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழை உலக சாதனைகள் சங்கம் வழங்கியது.

13 குழந்தைகளை மையப்படுத்திய கதை என்பதால், பல துறைகளில் சாதனை படைத்த 13 இளம் வயதினருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இப்படத்தை பயாஸ்கோப் ட்ரீம்ஸ் எல்எல்பி மற்றும் அகிரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தயாரித்துள்ளனர். கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். விழாவில் கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், மதன் கார்க்கி, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, அக்‌ஷயா உதய குமார், புகழ், வனிதா விஜயகுமார், கவுரவ் நாராயணன், சக்திவேலன், விதார்த், சரண், பேரரசு, ரோபோ சங்கர், தம்பி ராமய்யா, லிடியன் நாதஸ்வரம் கலந்துகொண்டனர்.