நடிகை பிரியா பவானி சங்கர், இப்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். ‘இந்தியன் 2’, ‘டிமான்டி காலனி 2’ படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ‘பீமா’ என்ற தெலுங்கு படத்தில் கோபிசந்த் ஜோடியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் மற்றொரு நாயகியாக மாளவிகா சர்மா நடிக்கிறார். கோபிசந்தின் 34 வது படமான...
நடிகை பிரியா பவானி சங்கர், இப்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். ‘இந்தியன் 2’, ‘டிமான்டி காலனி 2’ படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ‘பீமா’ என்ற தெலுங்கு படத்தில் கோபிசந்த் ஜோடியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் மற்றொரு நாயகியாக மாளவிகா சர்மா நடிக்கிறார்.
கோபிசந்தின் 34 வது படமான இதை கன்னட இயக்குநர் ஹர்ஷா இயக்குகிறார். கே.ஜி.எஃப் இசை அமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். சத்யசாய் ஆர்ட்ஸ் சார்பில் கே.கே.ராதாமோகன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. பிரியா பவானி சங்கர், ஏற்கனவே ‘கல்யாணம் கமனீயம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இது அவருக்கு 2 வது தெலுங்கு படம்.