
மேலும், ஒரு நிகழ்ச்சியில் பேசிய 'லியோ' படத் தயாரிப்பாளர் லலித்குமார் 'வாரிசு' படம் வெளிவருவதற்கு முன்பே 'லியோ' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்ததாகவும், ஆனால், 'வாரிசு' வெளிவரும் வரை 'லியோ' பற்றி வெளியில் எதையும் அறிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று 'ரெஜினா' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விஜய் 68 இயக்குனரான வெங்கட் பிரபு கலந்து கொண்டார்.
அவர் பேசும் போது ரசிகர்கள் 'விஜய் 68 அப்டேட்' என சத்தமிட்டனர். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, "லியோ' வந்த பிறகு கொடுக்கலாம், அப்புறம் விஜய் சாரே திட்டுவாரு. ஏன்டா, நீ போய் எல்லா இடத்துலயும் அப்டேட் கொடுக்கறன்னு கேப்பாரு. அதனால, 'லியோ' வந்த பிறகு 'தளபதி 68′ அப்டேட்," எனக் கூறினார். அதனால், 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதி வெளிவரும் வரை அடுத்த நான்கு மாதங்களுக்கு 'விஜய் 68' படத்தின் அப்டேட் வர வாய்ப்பில்லை.
