Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆவியுடன் போராடும் சிறுவன் கதை

தமிழ்த் திரையுலகில் பிரபலமாக இருந்தவர் மறைந்த எழுத்தாளரும், தயாரிப்பாளருமான தூயவன். அவரது மகன் பாபு தூயவன், திரைப்படக் கல்லூரியில் பயின்றார். பிறகு ‘கதம் கதம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கினார். ‘இட்லி’ என்ற படத்தை தயாரித்தார். தற்போது அவரது மேற்பார்வையில், அவரது மனைவி ஏ.முஸ்தரி தயாரித்துள்ள திகில் படம், ‘ஜெனி’. திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும், பல டி.வி தொடர்களையும் இயக்கிய நித்தியானந்தம்.பி இப்படத்தை இயக்கியுள்ளார். எம்4 இண்டர்நேஷனல் வழங்க, அப்பு மூவிஸ் தயாரித்துள்ளது.

‘பாரிஸ் ஜெயராஜ்’ விவாந்த், ‘மை டியர் பூதம்’ பரம் விக்னேஷ், மைதிலி, பிஜாய் மேனன், ஆக்‌ஷன் பிரகாஷ் நடித்துள்ளனர். ஏ.எம்.சயீஃப் இணைந்து தயாரிக்க, யுதீஷ் இசை அமைத்துள்ளார். திரைப்படக் கல்லூரி மாணவர் கீதாகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். துஷ்ட ஆவி ஒன்று சிறுவனை ஆக்ரமிக்க முயற்சிக்கிறது. அதிலிருந்து தன்னையும், தனது குடும்பத்தையும் காப்பாற்ற சிறுவனும், அவனது தந்தையும் போராடுகின்றனர். திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த இப்படத்தின் கதை, திரைக்கதையை அறிவாற்றல் பிதா எழுதியுள்ளார். பாஸ்கர் ராஜ் வசனம் எழுதியிருக்கிறார். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.