Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கிரிக்கெட் பவுலரின் கதை

தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படம், ‘கபில் ரிட்டன்ஸ்’. பேராசிரியர் னி சவுந்தரராஜன் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மற்றும் நிமிஷா ரியாஸ்கான், ‘பருத்திவீரன்’ சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான், பேபி ஷர்ஷா நடித்துள்ளனர். ஷியாம் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் இசை அமைத்துள்ளார். சினேகன், பா.விஜய், அருண் பாரதி பாடல்கள் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சினேகன், வையாபுரி கலந்துகொண்டனர். னி சவுந்தரராஜன் கூறுகையில், ‘ஆறிலிருந்து மூச்சு இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இக்கதை பொருந்தும். நமது கனவு நிறைவேற மூச்சிருக்கும் வரை முயற்சி செய்யுங்கள்’ என்றார். கிரிக்கெட் பவுலரை மையப்படுத்திய கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.