Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கமலுக்கு இன்று 70வது பிறந்த நாள்: அமெரிக்காவில் ஏஐ வகுப்பில் பிஸி

சென்னை: கமல்ஹாசனுக்கு இன்று 70வது பிறந்த நாள். இந்நிலையில் அவர் அமெரிக்காவில் தங்கி, ஏஐ படித்து வருகிறார். ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு ‘விக்ரம்’ படத்தின் மூலம் இளம் நடிகர்களுக்கெல்லாம் கடும் போட்டியாக அமைந்துவிட்டார் கமல்ஹாசன். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். கமலின் பிறந்த நாளையொட்டி இன்று பகல் 11 மணியளவில் அப்படத்தின் அப்டேட் வெளியாகிறது. வழக்கமாக தனது பிறந்த நாளில் ரசிகர்களையும் மீடியாவை கமல் சந்திப்பார். இப்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார்.

சினிமாவில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக 90 நாட்கள் கோர்ஸில் அவர் சேர்ந்திருக்கிறார். அதனால் தனது பிறந்த நாளை அங்குள்ள தனது நண்பர்களுடன் எளிமையாக கொண்டாட முடிவு செய்திருக்கிறார். அதே சமயம், அவரது மநீம கட்சி சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.