Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிக்கலான அம்மா வேடத்தில் நடிக்கிறேன்: ஊர்வசி

சென்னை: கதையின் நாயகியாக ஊர்வசி நடித்துள்ள படம், ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’. சுபாஷ் லலிதா சுப்பிரமணியன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், சுஜித் சங்கர், அபிஜா சிவகலா, மணிகண்டன் ஆச்சாரி, பானு, மிருதுளா மாதவ், சுதீர் பரவூர் நடித்துள்ளனர். ஸ்வரூப் பிலிப் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.வி.சுப்பிரமணியன், அசோக் பொன்னப்பன் இசை அமைத்துள்ளனர். ஜாய் மூவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அஜித் ஜாய் தயாரித்துள்ளார். ஆனந்த் குமரேசன் வசனம் எழுதியுள்ளார்.

இப்படம் குறித்து ஊர்வசி கூறியதாவது:

இப்படத்தில் சிக்கலான ஒரு அம்மா கேரக்டர் இருக்கிறது. அதில் நான்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் பிடிவாதமாக இருந்ததால் நடித்தேன். மடத்தனமான, மூடத்தனமான நம்பிக்கை கொண்ட அம்மாவுக்கு, மாலை 6 மணிக்கு மேல் பார்வையில் தடுமாற்றம் ஏற்படும் ஒரு மகன் இருக்கிறான். அவன் உலகிலுள்ள மற்றவர்களைப் போல் வாழ வேண்டும் என்று அம்மா ஆசைப்படுகிறாள். அவனுக்கு கிடைக்கும் நட்பால் அவனது வாழ்க்கை மாறுவதுதான் கதை.