சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில், ‘ரங்கூன்’ ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள படம், ‘அமரன்’. இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். விரைவில் படம் திரைக்கு வரவுள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். ஸ்ரீலட்சுமி மூவிஸ் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது...
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில், ‘ரங்கூன்’ ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள படம், ‘அமரன்’. இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். விரைவில் படம் திரைக்கு வரவுள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். ஸ்ரீலட்சுமி மூவிஸ் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படம் இது.
கன்னட நடிகை ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடிக்கிறார். முக்கிய கேரக்டர்களில் மலையாள நடிகர் பிஜூ மேனன், பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், முக்கியமான வேடத்தில் விக்ராந்த் நடிப்பதை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்திருந்த ‘லால் சலாம்’ என்ற படத்தில் விக்ராந்த் நடித்திருந்தார்.