Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இரட்டை வேடத்தில் விஷால்

சென்னை: ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, பிரபுதேவா நடித்த ‘பஹீரா’ ஆகிய படங்களை இயக்கியவர், ஆதிக் ரவிச்சந்திரன். தற்போது அவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘மார்க் ஆண்டனி’. முக்கியமான கேரக்டர்களில் ரீது வர்மா, எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வருகிறது.

பான் இந்தியா படமான இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. அதில், விஷால் இரட்டை வேடங்களில் தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும், வரும் செப்டம்பர் 15ம் தேதி படம் திரைக்கு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஹரி இயக்கும் படத்தில் விஷால் நடித்து வருகிறார். அவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.