Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குழந்தை பிரச்னையை பேசும் வெப்பம் குளிர் மழை

சென்னை: ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரவ் தயாரித்து, எடிட்டிங் செய்து, பாடல்கள் எழுதி, பெத்தபெருமாள் என்ற கேரக்டரில் நடித்துள்ள படம், ‘வெப்பம் குளிர் மழை’. இதற்கு முன்பு கிஷோர் குமார், சுபத்ரா நடித்த ஒரு படத்தை திரவ் இயக்கியுள்ளார். ‘வெப்பம் குளிர் மழை’ படத்துக்கு பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, சங்கர் ரங்கராஜன் இசை அமைக்கிறார். ‘குற்றம் கடிதல்’ படத்தில் உதவி இயக்குனராகவும் மற்றும் ‘மகளிர் மட்டும்’, ‘சுழல்’ ஆகிய படைப்புகளில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய பாஸ்கல் வேதமுத்து இயக்கியுள்ளார்.

படம் குறித்து அவர் கூறியதாவது: திருமணமான தம்பதிகள் சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. குறிப்பிடத்தக்க சமூக நெருக்கடியாக மாறியுள்ள குழந்தை பெற்றுக்கொள்ளுதல் பற்றிய அழுத்தமான சிக்கல்களைப் பற்றியும் படம் சொல்கிறது. வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் ஆடியவரும் மற்றும் ‘பொம்மை நாயகி’, ‘லேபிள்’ ஆகிய படைப்புகளில் நடித்தவருமான இஸ்மத் பானு, பாண்டி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். ‘திரி அய்யா’ என்ற ஜாலியான கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கோபக்கார மாமியார் வேடத்தில் ரமா நடித்துள்ளனர். தவிர மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.