சென்னை: ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் 2 பாகங்கள் ரிலீசான பிறகு தென்னிந்திய மொழிகளில் மீண்டும் பிசியாகி விட்டார், திரிஷா. தமிழில் விஜய் ஜோடியாக ‘லியோ’ படத்தில் நடித்து வரும் அவர், தனி ஹீரோயினாக நடித்துள்ள ‘தி ரோட்’ என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. தெலுங்கில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிரஞ்சீவி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கும் ‘ராம்’ என்ற படத்தின் முதல் பாகத்தில் மோகன்லால் ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஃபாரன்சிக்’ என்ற படத்தை இயக்கியிருந்த அகில் பால், அனாஸ் கான் இணைந்து இயக்கும் புதிய படம், ‘ஐடென்டிட்டி’.
இதில் டொவினோ தாமஸ் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் கேரளாவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்தில் முதலில் மடோனா செபாஸ்டியன் ஹீரோயினாக ஒப்பந்தமானார். தற்போது அவருக்குப் பதிலாக திரிஷா நடிக்கிறார். இதற்கு முன்பு நிவின் பாலியுடன் சேர்ந்து ‘ஹே ஜூட்’ என்ற படத்தில் திரிஷா நடித்திருந்தார்.