சென்னை: அஸ்வின் காக்கமானு மற்றும் காளி வெங்கட் நடித்த ‘பீட்சா 3’ படத்தில் அருண் ராஜ் இசையமைத்திருந்தார். அவர் கூறியதாவது: ‘பீட்சா 3’க்காக ஒரு விசித்திர இசைப் பயணத்தில், முற்றிலும் புதிய ஒலியின் தேடலைத் தொடங்கினேன். இந்த தேடல் என்னை நாட்டின் மிகப் பழமையான ‘மியூசி மியூசிகல்ஸ்’ என்ற கடைக்கு அழைத்து சென்றது. இங்குதான் 200 வருடம் பழமையான உடைந்த பியானோவை பார்த்தேன். அந்த பியானோவை சென்னைக்கு கொண்டு வந்து, ரிப்பேர் செய்து, பல புதிய உத்திகளைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்தோம். அதன் பலனாக, ‘பீட்சா 3’யில் ஒலிகள் தனித்துவம் வாய்ந்த பல இசைக் கோர்வைகளாக வடிவெடுத்தன. அறியாதவற்றை இசைத்தல் புதிய பாடகர்களை அறிமுகப்படுத்த நினைத்தேன். அதனால் பெரிதாய் பாடிய அனுபவம் இல்லாத வெளிநாட்டு பாடகர்களை பாட வைத்தது புது முயற்சியாக அமைந்தது. குழுப்பாடல் பதிவிற்கு வழக்கத்துக்கு மாறான இந்த புதிய பாடகர்களின் சேர்க்கை தனித்துவம் வாய்ந்த இசையைக் கொண்டு வந்தது. மேலும் ஒரு பின்னணி இசைக்குழுவை வைத்து வித்தியாசமான பலவகை ஒலி தாக்கங்களையும் (சவுண்ட் எபக்ட்ஸ்) உருவாக்கினேன். புதிய படங்களுக்கு இசையமைக்க கதைகள் கேட்டு வருகிறேன்.
27