வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் திரைக்கு வந்த ‘ராக்கி’, செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘சாணிக் காயிதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், தற்போது தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கேன் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், தனது 50வது படத்தை தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். இதையடுத்து தனுஷின் 51வது படத்தை தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்குகிறார். இது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்நிலையில், தனுஷின் 52வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மீண்டும் அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கூட்டணி அமைத்ததை நேற்று அறிவித்துள்ளார். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
38