ஐதராபாத்: பல மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளவர், சுனைனா. வெப்தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், டிவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தனது கையில் டிரிப்ஸ் ஏறுவது போலவும், மூக்கில் டியூப் வைத்திருப்பது போலவும், ‘தம்ஸ் அப்’ போஸ் கொடுத்துள்ள ஒரு போட்டோவை வெளியிட்டு, ‘எனக்கு சிறிது நேரம் கொடுங்கள். நான் திரும்பி வருவேன்’ என்று பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள், சுனைனாவுக்கு என்ன ஆயிற்று என்று கவலையுடன் கேட்டு பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், தனது இன்ஸ்டாகிராமில் இரண்டு போட்டோக்களை வெளியிட்டு, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பதிவிட்டு இருக்கிறார். அதைப் பார்த்த சிலர், ‘இதையெல்லாம் ஏன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்கிறீர்கள்?’ என்று கமென்ட் செய்து இருக்கின்றனர். இதற்கு இன்ஸ்டா ஸ்டோரியில் பதிலளித்துள்ள சுனைனா, ‘எனது பிரச்னைகள் குறித்து பதிவிட எனக்கு உரிமை இல்லையா? இதுபோன்ற உலகில்தான் வாழ்ந்து வருகிறோமா’ என்று கவலையுடன் கேட்டுள்ளார். ஆனால், தனது உடல்நிலை பாதிப்பு குறித்து இதுவரை அவர் எதுவும் பதிவிடவில்லை.