சென்னை: ‘ஒரு குப்பைக் கதை’ படத்தில் ஹீரோவாக நடித்தவரும், பல படங்களில் நடனம் ஆடியவருமான டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘லோக்கல் சரக்கு’. வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத் குமார் தயாரிக்க, எஸ்.பி.ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, உபாசனா ஆர்.சி, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம்புலி, வையாபுரி, சென்ராயன், வினோதினி வைத்தியநாதன் நடித்துள்ளனர். கே.எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்ய, வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசை அமைத்துள்ளார். விவேகா பாடல்கள் எழுதியுள்ளார். படம் குறித்து எஸ்.பி.ராஜ்குமார் கூறுகையில், ‘நடுத்தரக் குடும்பத்தின் தலைவர் பொறுப்பில்லாதவராக இருந்தால், அந்தக் குடும்பம் எவ்வழியில் செல்லும் என்பதை அழுத்தமாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறேன். பெண்கள் மன தைரியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதையும் சொல்கிறோம். மதுப் பழக்கத்தை வைத்து உருவாக்கியுள்ள காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கும். கமர்ஷியலுடன் கூடிய ஜனரஞ்சகப் படமான இது, வரும் 26ம் தேதி திரைக்கு வருகிறது’ என்றார்.
142