விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடித்த துணிவு படம் வெளியாகி எட்டு மாதங்களுக்கு பிறகு தற்போது அவர் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஏற்கனவே அஜித்துக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள த்ரிஷா இந்த படத்திலும் இணைந்திருக்கிறார்.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கப்பட்டது. முதல் நாளிலேயே அஜித் – த்ரிஷா இணைந்து நடிக்க கூடிய ரொமான்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அங்கு 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.