தெலுங்கில் முன்னணி இயக்குனர் த்ரி விக்ரம் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2020ம் ஆண்டு வெளியான அலவைகுண்ட புரம்லோ வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தப் படத்திற்கும் இசை தம்ன் தான். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
புஷ்பா 2 படத்தின் வேலைகளுக்கு பிறகு அல்லு அர்ஜுன் திரு விக்ரம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த படத்தில் இணைவார் என்று தெரிகிறது. அல வைகுண்டபுரம்லோ , படத்தின் வெற்றியும் அதன் பாடல்களின் பிரபலமும் தெலுங்கு தாண்டி இந்தியா முழுக்கவே பிரபலம்.
இந்தப் படத்திலும் அப்படியான காம்போ அமையும் என்று தெரிகிறது. படத்தில் நாயகி மற்றும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.