ஐதராபாத்: டோலிவுட்டிலுள்ள இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர், விஜய் தேவரகொண்டா. தற்போது அவரது தம்பி ஆனந்த் தேவரகொண்டா தெலுங்கில் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பேபி’. ரொமான்டிக் படமான இதில் வைஷ்ணவி சைதன்யா, நாகேந்திர பாபு நடித்து இருக்கின்றனர். சாய் ராஜேஷ் நீலம் எழுதி இயக்கினார். கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்து வெற்றிபெற்றுள்ள இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, ஸ்டுடியோ கிரீன் ேக.ஈ.ஞானவேல் ராஜா வாங்கியுள்ளார். தமிழில் இளம் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
281