மும்பை: பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் சாய் பல்லவி. தனது நடிப்பு திறமையால் அதிகம் பேசப்படுபவர் சாய் பல்லவி. பல வாய்ப்புகள் வந்தாலும் நல்ல கதை, வலுவான கேரக்டர் என இருந்தால் மட்டுமே அந்த படத்தில் அவர் நடிப்பார். இதுபோல் தேர்ந்தெடுத்து படங்களில் நடிப்பதால் பாலிவுட்டிலும் இவருக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. சில இயக்குனர்கள் அவரை அப்ரோச் செய்தபோது, கதை பிடிக்காததால் நடிக்க மறுத்தார். இந்நிலையில் ஆமிர்கானின் மகன் ஜுனைத் கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவி ஒப்புக்கொண்டுள்ளார்.
தமிழில் வெளியான லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் ஜுனைத் கான் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். இதில் நடித்தபடி சுனில் பாண்டே இயக்கும் படத்திலும் ஜுனைத் நடிக்கிறார். இதில்தான் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இது முழுநீள காதல் கதையாக உருவாகிறது. இந்த கதையும் இதில் தனது கேரக்டரும் பிடித்துவிட்டதால் சாய் பல்லவி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.