சென்னை: தனுஷ் நடித்துள்ள ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்த பின்னர் மெகா புரமோஷன் திட்டங்களை படக்குழுவினர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.முதல் கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை விரைவில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
84