சென்னை: திரைக்கு வந்த ‘ராக்கி’, ஓடிடியில் வெளியான ‘சாணிக் காயிதம்’ ஆகிய படங்களை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கியுள்ள படம், ‘கேப்டன் மில்லர்’. இதில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் நடித்துள்ளனர். பீரியட் கதை கொண்ட படமாக உருவாகியுள்ள இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. வரும் பொங்கலன்று படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
103