சென்னை: தமிழில் ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், ஆர்.வேல்ராஜ். தனுஷ் ஹீரோவாக நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’, ‘தங்கமகன்’ ஆகிய படங்களை இயக்கினார். இந்நிலையில், அவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மெர்லின்’, ‘அசுரகுரு’, ‘சிங்கப்பெண்ணே’, ‘ஜிஎஸ்டி’ ஆகிய படங்களை தொடர்ந்து ஜேஎஸ்பி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜேஎஸ்பி சதீஷ் குமார் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.