சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல், வரும் 16ம் தேதி நடக்கிறது. தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. சமீபத்தில் நடந்த பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் பங்கேற்ற ஆர்.கே.செல்வமணி, மீண்டும் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட மாட்டேன் என்றும், விரைவில் புதிய தமிழ்ப் படம் இயக்க இருப்பதாகவும் சொல்லி விலகிவிட்டார். இதையடுத்து சங்கத்தின் புதிய தலைவராக ஆர்.வி.உதயகுமார், செயலாளராக பேரரசு, பொருளாளராக சரண் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை தலைவர் உள்பட மற்ற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடக்கிறது.
87