சித்தார்த்தின் ‘டக்கர்’ படம், இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ‘நீரா நீரா’ என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் மே மாதம் 26ம் தேதியன்று இப்படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த தலைமுறையை ஈர்க்கும் வகையில் காதல், எமோஷன் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தில் சித்தார்த் ஜோடியாக திவ்யான்ஷா கவுசிக் நடிக்கிறார்.
மற்றும் யோகி பாபு, அபிமன்யு சிங், ஆர்ஜே விக்னேஷ்காந்த், ராம்தாஸ் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகும் இதை கார்த்திக் ஜி.கிரிஷ் எழுதி இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் தயாரித்துள்ளனர். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார்.