சென்னை: ‘குட் நைட்’ படத்தின் மூலம் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர், மணிகண்டன். ஏற்கனவே அவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அவர் நடித்துள்ள படம், ‘லவ்வர்’. பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ளார். கெளரி பிரியா, கண்ணன் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசை அமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.