சென்னை: விஜய்யை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த அட்லி, இந்த ஆண்டில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ இந்தி படத்தை இயக்கி, 1000 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை படைத்தார். இந்நிலையில் ஷாருக்கான் மற்றும் விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அட்லி கூறியுள்ள நிலையில் தற்போது அவர் அஜித்துக்கும் ஒரு கதை வைத்துள்ளதாக கூறியுள்ளார். அஜித் எப்போது ஓகே சொல்கிறாரோ அப்போது அவரது படத்தை இயக்க தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதன் முதலாக ‘ஆரம்பம்’ படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்தை சந்தித்தது குறித்து அட்லி கூறும்போது, ‘அப்போது ராஜா ராணி பட வேலைகளில் இருந்தேன். நயன்தாரா மூலம் அஜித்தை சந்தித்தேன். என்னை பார்த்ததும் தம்பி ஸ்கூல் முடிச்சிட்டீங்களா என அஜித் கேட்டு குழந்தைத்தனமாக சிரித்ததை எப்போதுமே மறக்க மாட்டேன். அதை கேட்டு நானும் சிரித்தேன். எப்போதுமே எனது வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் அஜித். அவ்வப்போது எனக்கு அறிவுரைகள் வழங்குவார். அதை நான் பின்பற்றுகிறேன்’ என்றார்.
105