சென்னை: ‘கானல் நீர்’ படத்தில் ஹீரோவாக நடித்தவர் சின்னி ஜெயந்த். தொடர்ந்து பல படங்களில் இவர் காமெடியனாகவே நடித்தது குறிப்பிடத்தக்கது. ‘கிழக்கு வாசல்’ படத்தில் இவரது காமெடி பேசப்பட்டது. இவர் ‘கை கொடுக்கும் கை’ படத்தில்தான் முதல் முறையாக அறிமுகம் ஆனார். ‘உனக்காக மட்டும்’, ‘கானல் நீர்’, ‘நீயே என் காதலி’ படங்களை இயக்கியும் உள்ளார். காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டியிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சித்திரஜா, இவர் முதல் முறையாக இயக்கும் படம் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்’. இதில் ஹீரோவாக சின்னி ஜெயந்த் நடிக்க உள்ளார். லாரி டிரைவர் ஒருவருக்கும் அவருக்கு கிடைக்கும் கைக்குழந்தைக்கும் இடையிலான பாசத்தை சொல்லும் படமாக இது உருவாகிறது.
190