சென்னை: மெட்ராஸ் ஸ்டுடி யோஸ் அன்சு பிரபாகர் தயாரித்துள்ள படம், ‘13’. ஜி.வி.பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ் மேனன், ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா, ஐஸ்வர்யா, ஆதித்யா கதிர் நடித்திருக்கின்றனர். சி.எம்.மூவேந்தர் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசை அமைத்துள்ளார். கே.விவேக் இயக்கியுள்ளார். அவர் கூறும்போது, ‘இது ‘ராட்சசன்’, ‘போர் தொழில்’ ஆகிய படங்களைப் போல் முழுநீள இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
13 என்ற நம்பரை ‘அன்லக்கி நம்பர்’ என்பார்கள். அந்த இமேஜை இப்படம் உடைக்கும். நண்பர்கள் ட்ரிப் செல்லும்போது ஜாலியாக செய்யும் விஷயங்கள், திடீரென்று அவர்களுக்கு எதிராக எப்படி மாறுகிறது என்பது கதை’ என்றார். ஜி.வி.பிரகாஷ் குமார் கூறும்போது, ‘இப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும். காரணம், கதைக்களம் மிகவும் புதிது. ‘டார்லிங்’ படத்துக்குப் பிறகு நான் நடித்துள்ள ஹாரர் படமான இது, ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும்’ என்றார்.