சென்னை: ஸ்ரவந்தி மூவிஸ் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைதன்யா தயாரித்துள்ள படம், ‘கிடா’. ரா.வெங்கட் எழுதி இயக்கியுள்ளார். உலக அளவில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம், வரும் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. முதன்மை வேடங்களில் பூ ராமு, காளி வெங்கட் நடித்துள்ளனர். மற்றும் மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி நடித்துள்ளனர். எம்.ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசை அமைத்துள்ளார். ஏகாதசி பாடல்கள் எழுதியுள்ளார். மதுரை அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவுக்கும் மற்றும் ஒரு ஆட்டுக்குட்டிக்கும் இடையிலுள்ள பாசப்பிணைப்பை பற்றி சொல்லும் படமாக உருவாகியுள்ளது. மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மேலும், தீபாவளியன்று கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’, ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, விக்ரம் பிரபு நடித்துள்ள ‘ரெய்டு’ ஆகிய தமிழ்ப் படங்களும், இந்தியில் சல்மான்கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள ‘டைகர் 3’ படமும் திரைக்கு வருகிறது.
53