சென்னை: அடுத்த மாதம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் வெப்தொடர், ‘லேபில்’. பாடகர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் ஆகிய பன்முகம் கொண்ட அருண்ராஜா காமராஜ் இத்தொடரின் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில், ‘லேபில்’ என்ற தலைப்பு இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘வெப்தொடருக்காக சூட்டப்பட்டுள்ள ‘லேபில்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள ‘ல்’ என்பதற்கு கதையில் ஒரு அர்த்தம் இருக்கிறது. எனவேதான் ‘ள்’ என்ற எழுத்தைப் பயன்படுத்தவில்லை’ என்றார். இத்தொடரில் ஜெய், தான்யா ஹோப், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண்ராஜ், மன், இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளனர். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். லோவிதா ஒரு பாடலை எழுதி பாடியுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளது.
66