சென்னை: அள்ளித்தந்த வானம், ஸ்ரீ, ரமணா, ஜெயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கல்யாணி. தனக்கு முதுகு தண்டுவடத்தில் பிரச்னை இருந்ததாகவும் அதற்காக அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். அந்த பதிவில், ‘கடந்த ஒன்றரை மாதமாக மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தளர்வடைந்து போய்விட்டேன். எனது உடல் ஆரோக்கியம் மிகவும் மோசமாகிவிட்டது. 2016ம் ஆண்டு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். அதற்குப் பிறகு சில வருடங்கள் நன்றாகத்தான் இருந்தேன்.
அப்போதுதான் என் மகள் நவ்யாவை பெற்றெடுத்தேன். கடந்த ஆறு மாதங்களாக என் தண்டுவடத்தில் மீண்டும் அதே வலி வர ஆரம்பித்துவிட்டது. இன்னொரு முறை அதே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இம்முறை அந்த ஸ்க்ரூக்களையும் பிளேட்களையும் எடுத்துவிட்டு இன்னொருவருடைய எலும்பை என் முதுகு தண்டுவடத்தில் பொருத்த வேண்டும் என்று டாக்டர் சொன்னார். இந்த முறை அதிலிருந்து மீண்டு வருவதற்கு மிக நீண்ட நாட்கள் தேவைப்படும் என்று சொன்னார். கடும் சிரமமான சூழலில் அவதிப்படுகிறேன்.