சென்னை: இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் இப்படத்தின் துவக்கி விழா படப்பிடிப்புடன் நேற்று துவங்கியது. இதில் படக்குழுவினருடன் விக்ரம் கலந்துகொண்டார். துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு, எழில் அரசு .கே ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டராக சக்திகுமார், குமார் கங்கப்பன் கலை இயக்கத்தையும், ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் பணியாற்றுகின்றனர். கபடி விளையாட்டை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.