சென்னை: மன்சூர் அலிகான் நடித்த ‘சரக்கு’ என்ற படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பிரமாண்டமான அம்மன் சிலை அலங்காரம், அக்னி சட்டி என்று வித்தியாசமான முறையில் நடந்தது. கே.பாக்யராஜ், பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், ரவிமரியா கலந்துகொண்டனர். ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் கதை எழுதி தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார். ஜெயக்குமார். ஜெ இயக்கியுள்ளார். அருள் வின்சென்ட், மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்துள்ளனர். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். எழிச்சூர் அரவிந்தன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். முக்கிய வேடங்களில் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, சரவண சுப்பையா, சேஷு, அனுமோகன், ஆடுகளம் நரேன், தீனா, பபிதா உள்பட 40க்கும் மேற்பட்டவர்கள் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
314