புதுடெல்லி: பணமோசடி வழக்கில் சிக்கிய ஜாக்குலின் பெர்னாண்டஸ் வௌிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் அவர் நிம்மதி அடைந்துள்ளார். ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதான வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் தான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். இந்நிலையில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘குற்றம்சாட்டப்பட்ட ஜாக்குலின் பெர்னாண்டஸ், வெளிநாடு சென்று வர அனுமதி அளிக்கப்படுகிறது. ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு செய்யப்படுகிறது. இந்தியாவை விட்டு அவர் வெளியேறும் மூன்று நாட்களுக்கு முன்னர், நீதிமன்றம் மற்றும் அமலாக்கத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். ரூ. 50 லட்சத்துக்கான நிரந்தர வைப்பு ரசீதை டெபாசிட் செய்ய வேண்டும்’ என்பது போன்ற கட்டுப்பாடுகளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் ஜாக்குலின் பெர்னாண்டஸ் விரைவில் வௌிநாடு செல்வார் என்றும், நீதிமன்ற உத்தரவால் அவர் நிம்மதி அடைந்துள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் கூறினர்.
29