சென்னை: தமிழ்ப் படவுலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான நயன்தாரா நடிக்கும் புதிய படம், ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்க, ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரிக்கிறார். டியூட் விக்கி எழுதி இயக்க, ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார், ஷீலா ராஜ்குமார், ரித்விகா, நரேந்திர பிரசாத் நடிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்றிருந்த நிலையில், தற்போது படக்குழுவினர் கொடைக்கானலில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.
70