மும்பை: பிரபல நடிகை ஊர்வசி ரவுடேலா, தான் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதை மறைமுகமாக ஒப்புக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஊர்வசி ரவுடேலா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நிருபர் ஒருவர், ‘அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகி விட்டதாக கூறுகின்றனர். 1 நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்குவதாக கூறுகின்றனர். பாலிவுட்டில் அதிக வாங்கும் நடிகையாக எப்படி மாறினீர்கள்? என்று கேட்கிறார்.
அதற்கு ஊர்வசி ரவுடேலா அளித்த பதிலில், ‘இது நல்ல முன்னேற்றம் தானே. ஒவ்வொரு நடிகருக்கும், நடிகைக்குள்ளும் இருக்கும் சம்பள சாதனையாக இதனை பார்க்க வேண்டும்’ என்று கூறுகிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்த பயனர் ஒருவர், ‘ஊர்வசி ரவுடேலா 1 மணி நேரத்தில் 60 கோடி சம்பாதிக்கிறார். ஒரே நாளில் 1,440 கோடி வரை சம்பாதிப்பாரா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதேபோல் பலரும் பலவித கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் ஊர்வசி பொய் சொல்கிறார். அவர் என்ன ஹாலிவுட்டிலா பணியாற்றுகிறார் என நெட்டிசன்கள் சிலர் தாக்கி வருகின்றனர்.