சென்னை: சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கில் சமுத்திரக்கனி நடிக்கும் படம், ‘ராமம் ராகவம்’. ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பிரபாகர் ஆரிபாக வழங்க, பிருத்வி போலவரபு தயாரிக்க, தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி திரைக்கதை எழுதி இயக்கி, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தந்தை, மகன் பாசத்தை மையப்படுத்தி படம் உருவாகிறது.
ஐதராபாத், ராஜமுந்திரி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. சிவ பிரசாத் யானல கதை எழுத, துர்கா பிரசாத் கொல்லி ஒளிப்பதிவு செய்கிறார். அருண் சிலுவேரு இசை அமைக்கிறார். மாலி வசனம் எழுதுகிறார்.