இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி, தற்கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் விடுதலையாகி, மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘நான் சிறையில் இருந்தபோது என்னை பலபேர் ‘சூனியக்காரி’ என்று சொன்னார்கள். அதைக்கேட்க நன்றாக இருந்தது. காரணம், அந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தக்காலத்தில் சூனியக்காரி என்று சொல்லப்படுவர்கள், ஆணாதிக்கச் சமூகத்துக்கு எதிரானவர்களாக இருந்தனர்.
ஆணாதிக்கம் நிறைந்தவர்களின் கருத்துக்கு எதிரானவர்களாக இருந்தனர். அவர்களுக்கு தனி கருத்து இருந்தது. எனவே, என்னை சூனியக்காரி என்று அழைப்பது குறித்து நான் வருத்தப்படவில்லை. என்னை அவ்வாறு அழைப்பவர்கள், ஆணாதிக்கச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு ஜாமீன் கிடைத்தால், அதிவேகமாக நடனமாடி உங்களை மகிழ்விப்பேன் என்று சிறைவாசிகளிடம் சொல்லியிருந்தேன். சமீபத்தில் எனக்கு ஜாமீன் கிடைத்தது. ஏற்கனவே சொன்னபடி நான் சிறையில் நடனமாடினேன்’ என்றார்.