போயபதி ஸ்ரீ னு இயக்கத்தில் ராம் பொதினேனி, ஸ்ரீ லீலா நடித்துள்ள படம், ‘ஸ்கந்தா’. ஸ்ரீ னிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீ னிவாசா சித்தூரி தயாரித்துள்ளார். பாலகிருஷ்ணா நடித்த ‘அகாண்டா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு போயபதி ஸ்ரீ னு, ராம் பொதினேனி இணைந்துள்ள மாஸ் ஆக்ஷன் எண்டர்டெயினர் படமான இதில், இதுவரை பார்க்காத வித்தியாசமான மாஸ் கெட்டப்புகளில் ராம் பொதினேனி நடித்துள்ளார். இந்நிலையில், கடைசி பாடலுடன் ‘ஸ்கந்தா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது. படத்தில் இருந்து வெளியிடப்பட்ட முதல் சிங்கிளான ‘நீ சுட்டு சுட்டு’ என்ற பாடல் வரவேற்பு பெற்றுள்ளது. தமன் இசை அமைத்த இப்பாடல் காட்சியில் ராம் பொதினேனி, ஸ்ரீ லீலா நடனம் ஆடியுள்ளனர். சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், வரும் செப்டம்பர் 15ம் தேதி ‘ஸ்கந்தா’ படம் திரைக்கு வருகிறது.