தெலுங்கில் பாரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் 20வது படம், ‘சுயம்பு’. இதில் ஏற்றுள்ள கேரக்டருக்காக, வியட்நாமில் கடுமையான சண்டைப் பயிற்சிகளை ஹீரோ நிகில் ஒரு மாதம் மேற்கொண்டார். படத்தில் போர் வீரனாக நடிப்பதற்காக ஆயுதங்களை இயக்கவும், தற்காப்புக்கலைக்கான பயிற்சிகளைப் பெறவும், குதிரை சவாரி செய்யவும் தீவிர பயிற்சி பெற்ற அவர், நம்பவே முடியாத அளவுக்கு சில சண்டைக் காட்சிகளை திரையில் கொண்டு வர முடிவு செய்துள்ளார்.
அனைத்துப் பயிற்சிகளையும் முடித்துள்ள நிகில், தற்போது வாள் சண்டையில் நிபுணராகி இருக்கிறார். அதாவது, இரு கைகளிலும் வாள்வீச பயிற்சி பெற்றுள்ளார். நிகில் ஜோடியாக சம்யுக்தா நடிக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். வாசுதேவ் முனேப்பகரி வசனம் எழுதுகிறார்.