மும்பை: இத்தாலியில் கணவருடன் காரில் சென்றபோது, நடிகையின் கார் மோதிய விபத்தில் சுவிஸ் தம்பதி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட் நடிகை காயத்ரி ஜோஷி, அவரது கணவர் விகாஸ் ஓபராய் இருவரும் சமீபத்தில் இத்தாலிக்கு சென்றிருந்தனர். சர்டினியா பகுதியில் தம்பதியின் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாகச் சென்ற லாரியை கார் முந்திச் செல்லும்போது, எதிரே வந்த மினி லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் மினி லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் அடுத்தடுத்த வாகனங்கள் மோதிய நிலையில், சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கணவன், மனைவி உயிரிழந்தனர். காரில் இருந்த காயத்ரி ஜோஷி, அவரது கணவர் விகாஸ் ஓபராய் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
288