சென்னை: மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறை மாணவர் சிவபிரகாஷ் இயக்கியுள்ள படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இதில் தங்கர் பச்சான் மகன் விஜித் பச்சான் ஹீரோவாக நடிக்க, அவரது ஜோடியாக ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். மற்றும் மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் நடித்துள்ளனர். ஜே.பி.தினேஷ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்துள்ளார். நல்ல சிந்தனைகள் கொண்ட சாமானியனை பற்றிய கதை கொண்ட இப்படத்தை ரியோட்டா மீடியா தயாரித்துள்ளது. படம் குறித்து சிவபிரகாஷ் கூறுகையில், ‘ஹீரோவின் வாழ்க்கையில் 3 வெவ்வேறு காலங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக கதை எழுதப்பட்டுள்ளது. சமூகம் மூலம் இழைக்கப்பட்ட தீமைகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரஸ்யமான திருப்பங்களுடனும் படமாக்கியுள்ளோம். தற்போது பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது’ என்றார்.
102