ஐதராபாத்: விஸ்வக் சென்னின் நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான தெலுங்கு படம் ‘பூ’. இதையடுத்து விஸ்வக் சென் நடித்துள்ள படம் ‘கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி’
இப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து சுட்டம்லா சூசி என்ற பாடல் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.இதில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நடிகர் விஸ்வக் சென், நடிகை நேகா செட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது விஸ்வக் சென் மற்றும் நேகா செட்டி ஆகியோர் இணைந்து சுட்டம்லா சூசி என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடினார்கள மேடையில் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென நேகாவின் புடவையை பிடித்து விஸ்வக் சென் இழுத்தார். இதை எதிர்பார்க்காத நேகா அதிர்ச்சி அடைந்தார். பிறகு மோசமான ஆசைகளுடன் விஸ்வக் சென் நடனமாடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பொது வெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றே விஸ்வக் சென்னுக்கு தெரியவில்லை என நெட்டிசன்கள் தாக்கி வருகின்றனர்.