மும்பை: பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள டாப்ஸி, மும்பையில் தனது தங்கையுடன் இணைந்து சொந்த பிசினஸ் செய்து வருகிறார். திரைப்படம் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். தற்போது இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அவர், இந்தியில் ஷாருக்கானுடன் ‘டன்கி’, தமிழில் ‘ஏலியன்’ ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், மெர்சிடிஸ் மெபேக் ஜிஎல்எஸ் மாடல் சொகுசு காரை டாப்ஸி வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.3.5 கோடி. அந்த புதிய சொகுசு காருடன் டாப்ஸி போஸ் கொடுக்கும் போட்டோவை, அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
82