ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள படம், ‘டன்கி’. இதை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட், ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் இணைந்து வழங்குகின்றன. ராஜ்குமார் ஹிரானி, கவுரி கான் தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி, கனிகா தில்லான் எழுதியுள்ளனர். வரும் டிசம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது.
பல்வேறு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் 5 முக்கிய கதாபாத்திரங்களான ஷாருக்கான், டாப்ஸி, விக்ரம் கோச்சார், அனில் குரோவர், விக்கி கவுஷல் ஆகியோர் இடம்பெற்ற போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கதாபாத்திரங்கள் தங்கள் கனவுகளை நனவாக்க சந்திக்கும் சவால்கள் மற்றும் அவர்களின் நட்பின் ஆழம் குறித்து தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.