மும்பை: விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகி வந்த படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இயக்குனர் ராம் ராகவன் இயக்கத்தில் உருவான இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 23ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது கிறிஸ்துமஸ் தினத்தில் ஷாருக்கானின் ‘டன்கி’ மற்றும் பிரபாஸின் ‘சலார்’ ஆகிய இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆவதால் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு அதாவது டிசம்பர் 8ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஹீரோவாக நடித்த முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
103