கொச்சி: மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் அஜ்மல். கேரளாவை சேர்ந்த இவர், மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது ஒரு வேனல் புழையில் என்கிற மலையாள படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக விமலா ராமன் நடிக்கிறார். அஜ்மல் 16 ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் பிரணய காலம் என்கிற படத்தில் அறிமுகமானார். அதில் அவருக்கு ஜோடியாக விமலா ராமன் நடித்திருந்தார். இப்போது 16 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இது பற்றி அஜ்மல் கூறும்போது, ‘பிரணய காலம்’ படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத படம். அதில்தான் சினிமாவுக்கு அறிமுகமானேன். அதில் என்னுடன் நடித்த விமலா ராமனை மீண்டும் இந்த படத்தில் பார்ப்பேன் என நினைக்கவில்லை. அதுவும் நடந்துள்ளது மகிழ்ச்சி’ என்றார். விமலா ராமன், நடிகர் விநய்யை காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
69