சென்னை: அறிந்தும் அறியாமலும், பில்லா, ஆரம்பம் என ஹிட் படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். கடைசியாக இந்தியில் ‘ஷெர்ஷா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தமிழில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் ஒரு படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் இந்தியில் ஒரு படம் இயக்கவுள்ளதாகவும், சல்மான் கான் அதில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இப்படத்தை கரண் ஜோகர் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த செய்தி பல மாதங்களாக உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அது உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சல்மான் கானின் அடுத்த படமாக இருக்கும் எனவும், வருகிற நவம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் மொத்தம் 8 மாதங்கள் எனப் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், விரைவில் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு ஆக்ஷன் ஜானரில் இப்படம் பெரிய பொருட்செலவில் உருவாகுவதாகவும் பேசப்படுகிறது.
82